பெண்ணே ! ! ! !
நான் என் காதலைக் கூறமுன்பே
நான் உன்னைக் காதலிப்பது உனக்கு
தெரியுமடி..
ஆனால் நான் காதலை கூறும் வரைக்கும்
காத்திருந்து . நான் காதலைக் கூறிய
பின்பு மறுத்தாயே ஏனடி ! ! !..
உன் இதயத்திற்க்கு என்னை
பிடித்திருந்தது இருந்தாலும் மறுத்துவிட்டாய் ! !
என் மனதிற்க்கு பிடித்த ஒருத்தியை
நான் மனைவியாக்க காத்திருந்தேன் ஆனால்
நீயோ!! சகல வழிகளிலும் உனக்கும் உன்
குடும்பத்தினருக்கும் சரியான ஒருவனை
கணவனாக்க காத்திருந்தாய்.. என்னை
உன் கணவனாக்க எத்தனையோ ! !
தகுதிகளை என்னுடன் பொருத்திப் பார்த்தாய்
எதுவுமே உனக்குச் சரிவரவில்லை..
எல்லாவற்றிலும் நான் பூச்சியம் தானே ! !.
ஆனால் உனக்கு ஒன்று மட்டும்
புரியவில்லை நீ எதிர்பார்த்த அத்தனை
தகுதிகளையும் ஒரு நாள் நான்
அடைந்துவிடுவேன் அதுவரை ! ! !
எனக்காக காத்திருக்க உனக்கு நேரமில்லை
எல்லாவற்றுக்கும் மேல் அந்த தகுதிகளை
ஒரு நாள் நான் அடைந்து விடுவேன்
என்று என் மீது உனக்கு நம்பிக்கையும்
இல்லை--- வேதனைப்பட்டேன் என்
நிலையை எண்ணி .. வருத்தப்பட்டேன்
உன் முடிவை எண்ணி..என் மனதிற்கு
பிடித்த ஒருத்தியையே ! ! நான்
தேடினேன் ஆனால் இந்த சமூகத்தில்
உயர்ந்த ஒருத்தனையே ! ! நீ தேடினாய் ! !..
என் காதலே உனக்குப் புரியவில்லையே ! !
உன்னை வெறுப்பதைத் தவிர மன்னிக்கவும்
உன்னை மறப்பதைத் தவிர எனக்கு
வேறு வழியில்லை மறந்துவிடுகிறேன் உன்னை..