tamilboy
Posted February 5, 2008 by tamilboy
'கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே' - இது
கண்ணபிரான் சொன்னது
'காதலைச் செய்
பலனை எதிர்பார்' - இது
காதல் பிரான் சொல்வது
----------------------------------------------------
எந்தப் பூங்காவிலும்
அழகான பூக்கள்
காதலர்களே!
----------------------------------------------------
வீட்டுக்கு ஒரு மரம்
இதயத்துக்கு ஒரு காதல்!
----------------------------------------------------
நம் காதலியைப் பார்க்கையில்
நம்மை மறந்து விடுகிறோமே
அதுதான் தியானம்.
----------------------------------------------------
'ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு' - இது
இயேசுபிரான் சொன்னது.
'ஒரு கன்னத்தில் முத்தமிட்டால்
மறு க்ன்னத்தைக் காட்டு' - இது
காதல் பிரான் சொல்வது.
----------------------------------------------------
ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
காதல் இல்லாத மனிதன்
கால் மனிதன்!
----------------------------------------------------
அன்புக்குத்
தாழ் இல்லை
காதலுக்குக்
கதவே இல்லை!
----------------------------------------------------
பூமியில் ஒரு காதல்
ஏற்றுக்கொள்ள்ப்படுகிறபோது
வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கிறது
மறுக்கப்படுகிறபோது
ஒரு நட்சத்திரம் மறைகிறது!
----------------------------------------------------
அன்பே சிவம்
காதலே சக்தி!
----------------------------------------------------
சொர்க்கத்தத் தேடி
நீங்கள் போக வேன்டும் என்றால்
ஆன்மிகத்தை நாடுங்கள்
சொர்க்கம் உங்களைத் தேடி
வர வேண்டும் என்றால்
காதலை நாடுங்கள்!
----------------------------------------------------
காதல் நதியின்
அக்கரையும் பச்சை
இக்காரையும் பச்சை!
----------------------------------------------------
பாவத்தின் சம்பளம்
மரணம்
புண்ணியத்தின் சம்பளம்
காதல்!
----------------------------------------------------
மனித உரிமையில்
முதல் உரிமை
காதலிக்கும் உரிமைதான்!
----------------------------------------------------
உங்களுக்காகத் துடிக்கும்
உங்கள் இதயத்துக்கு
நீங்கள் செய்யும் நன்றிக்கடன்
அங்கே ஒரு தேவதையை
குடிவைப்பதுதான்!
----------------------------------------------------
ஏழு ஜென்மத்திலும்
காதலிக்கப்படுகிற மனிதனே
எட்டாவது ஜென்மத்தில்
கடவுளாகிறான்!
Comments
athia wrote at February 8, 2008
0 Votes
 very nice pogada
athia