எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே போட்டுட்ட?
ஒரு மகான்தான் கவலைக்கு காரணமானத தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்.
------------------------------------------------------- ----------------------------
பல் டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டியே.... எப்படி போகுது வாழ்க்கை?
எப்படியோ பல்லைக் கடிச்சிட்டு ஓட்றேன்..
------------------------------------------------------- -----------------------------
ஆண் தைரியசாலியா பெண் தைரியசாலியாங்கிற பட்டிமன்றம் நடந்துக்கிட்டு இருந்ததே.. எங்காய்ய தீர்ப்பு சொல்ற சமயத்தில் நடுவரக் காணோம்.
என்ன தீர்ப்பு சொல்றதுன்னு அவங்க மனைவிக்கிட்ட கேட்க போயிருக்காறாம்.
------------------------------------------------------- ------------------------------
பெண்ணைப் பெற்றவர் : பொண்ணைப் பிடிச்சிருக்கா மாப்பிள்ளை?
மாப்பிள்ளை : பொண்ண புடிச்சிருக்கு.. ஆனா தலைமுடிதான் கொஞ்சம் குட்டையா இருக்கு.
பெண்ணைப் பெற்றவர் : அதற்கென்ன விக்கை மாத்திட்டாப் போச்சு.
------------------------------------------------------- --------------------------------
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் மிருகமா மாறிடுவேன் ஜாக்கிரதை.
மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
------------------------------------------------------- ---------------------------------
மனைவி: உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கமலா என்ற பெண்ணுடன் சினிமாவுக்குப் போனீங்களா?
கணவர்: ஆமாம். என்ன மன்னிச்சிடு மாலா..
மனைவி: யார் டிக்கெட் வாங்கியது?
கணவர்: அவள்தான் வாங்கினாள்.
மனைவி: நல்ல காலம். அனாவசியமா நீங்க தான் பணத்த செலவழிச்சிட்டீங்களோன்னு நெனச்சேன்.
------------------------------------------------------- ------------------------------
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனா இன்னமும் நான் காதலிச்சிக்கிட்டு இருக்கேன்.
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்
நீ வேற.. என் பொண்டாட்டிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னைக் கொன்றே விடுவாள்.
------------------------------------------------------- --------------------------------
ஹேய் வரியா என் வீட்டுல புதுநாய் வாங்கியிருக்கோம். அது கூட விளையாடலாம்
புது நாயாச்சே.. அது கடிக்குமா
அதைத் தெரிஞ்சிக்கத்தான் உன்ன கூப்பிடுறேன்
------------------------------------------------------- --------------------------------
கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது.
அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
------------------------------------------------------- --------------------------------
எங்க மாதர் சங்கத்திலே எல்லோருக்கும் இப்ப குழந்தை பிறந்தாச்சு அதனாலே..
அதனாலே...
அதை மதர் சங்கம்னு மாத்திட்டோம்!
------------------------------------------------------- ---------------------------------
மனைவி: (கடிதத்தில்) உங்களைப் பிரிந்த இந்த இரண்டு மாதங்களில் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்.
கணவன்: (பதில் கடிதத்தில்) என்னுடைய நலனைக் கருத்தில் கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிவிடவும்.
------------------------------------------------------- --------------------------------
என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இரண்டு பொண்ணுங்க என் பின்னாடியே அலையறாங்க டா
அப்படியா யார்டா அவங்க?
எங்க அம்மாவும், ஆயாவும்.
------------------------------------------------------- -------------------------------
ஆசிரியர்: திருக்குறளை எழுதியது யார்?
மாணவன்: எங்க அப்பா சார்?
ஆசிரியர்: என்னடா இது. புதுசா சொல்றே! யாருடா அவரு?
மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துலே பெயிண்டரா இருக்கார் சார்.
------------------------------------------------------- --------------------------------
சிறுவன்: நேத்து ராத்திரி நான் ஒரு கூடை பன்ரொட்டி சாப்பிடுவது போல கனவு கண்டேன்
சிறுமி: அப்படியா?
சிறுவன்: காலையில பார்த்தா என்னோட தலையணையக் காணவில்லை.
------------------------------------------------------- --------------------------------
மக்கு : லிப்ட் ஆபரேட்டரிடம் பத்தாவது மாடிக்குப் போகணும்.
ஆபரேட்டர் : என்ன சார் நீங்க.. இந்த கட்டிடத்தில மொத்தமே ஆறு மாடிதானே இருக்கு.
மக்கு : அப்போ நீ ஆறாவது மாடியில விட்டுடு.. 10வது மாடிக்கு நான் படியேறி போய்க்கிறேன்.
------------------------------------------------------- ------------------------------
ஏய் சர்வர் என்னப்பா வடை இது? நேத்து நல்லா இருந்ததே!
அதே வடைதாங்க. நேத்து சுட்டதுதான்...
------------------------------------------------------- -------------------------------
ஏங்க மாத்திரையப் போய் பிராந்தியோட சேத்துக் குடிக்கிறீங்க?
அவர்தாண்டி சொன்னாரு..
என்ன சொன்னாரு?
இந்த மாத்திரைய தண்ணியோட மட்டும் போடுங்கன்னு சொல்லி அனுப்பினார்.
------------------------------------------------------- ------------------------------
ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணுத்துக்குமே போக முடியல..
ஏன் உடம்பு சரி இல்லையா?
நீங்க வேற.. யாருமே கூப்பிடலே
------------------------------------------------------- --------------------------------
ஏன்யா.. திருட்டுப் பய கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே.. ஏன் சும்மா வர்றீங்க? அவன் இல்லையா?
இருந்தான் சார்.. ஆனால். அவன் சட்டையே போடலீங்க அதான்.
------------------------------------------------------- --------------------------------
தலைக்கு மேல வேலையா? அப்படி என்னத்தான் வேலை செய்ற.
என்னோட முதலாளிக்கு ஒத்தாசையா இருக்கேன்.
அவரு என்ன செய்றாறு..
அவர் சும்மாத்தான் இருப்பாரு.
------------------------------------------------------- --------------------------------
காஞ்சீபுரம் இட்லி கேட்டால் என்னய்யா இப்படி ஒரு இட்லிய கொண்டு வந்து வக்கிறீங்க.
அச்சச்சோ நீங்க காஞ்சிபுரம் இட்லின்னு சொன்னீங்களா? என் காதுல காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்!
------------------------------------------------------- -------------------------------
மனைவி : டாக்டர் என்னோட வீட்டுக்காரர் சாகப் பிழைக்க இருக்கிறார்.. நான் உங்களத்தான் நம்பி இருக்கேன்.. டாக்டர்.
டாக்டர் : அச்சச்சோ.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா..
------------------------------------------------------- --------------------------------
டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு
நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.
------------------------------------------------------- -------------------------------
அவர் ஏன் கார ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
விற்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.
------------------------------------------------------- -------------------------------
ராமு: குரைக்கிற நாய் கடிக்காது
சோமு: எப்படிடா அவ்ளோ சரியா சொல்ற?
ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய முடியாது. அதனால தான்.
------------------------------------------------------- -------------------------------
கணவன் : இன்னிக்குத்தான் நீ ரொம்ப சந்தோஷமா இருக்குறத நான் பாக்குறேன்.
மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
------------------------------------------------------- --------------------------------
எனக்கு ஒரு சந்தேகம்டா.
என்னடா கேளு.
பைக் இருந்தா ஓட்ட தோணுது, டிவி இருந்தா பாக்கத் தோணுது?
ஆமாம்.. இதில் என்ன சந்தேகம்.
இல்லடா.. புக் இருந்தா மட்டும் ஏன் படிக்கத் தோன மாட்டேங்குது?
------------------------------------------------------- --------------------------------
சுப்பு : உன் பொண்டாட்டி உடம்ப குறைக்க குதிர சவாரி செஞ்சாங்கலாமே! பலன் இருந்ததா?
குப்பு : ம்ம பயங்கரமா எடை கொறஞ்சதே.
சுப்பு : அப்படியே.. பரவாயில்லையே.. எவ்ளோ எடை குறைஞ்சது?
குப்பு : 20 கிலோ
சுப்பு : நெஜமாவா?
குப்பு : ஆனா.. எடை கொறஞ்சது எம்பொண்டாட்டிற்கு இல்ல.. குதுரைக்கு.
------------------------------------------------------- ---------------------------
டேய் ஏன்டா.. பரீட்சையில பெயில் ஆயிட்ட?
பரிட்சையில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு பெயில் ஆகா முடியாதுல்ல.. அதாம்பா.
------------------------------------------------------- ---------------------------
அரசே இவர்கள் இருவரும் ராஜ ரகசியத்தை வெளியிட்டுவிட்டனர்...
அப்படியா? எந்த ராஜ ரகசியத்தை?
அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு சென்று கொண்டிருந்தனர்
முதலில் இவர்களை சிறைச்சேதம் செய்..
------------------------------------------------------- ---------------------------
கடைக்காரன் : கடையில் 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் 1 கடிகாரம் இலவசம்
பாபு : எது வாங்கினாலும் கடிகாரம் இலவசமா?
கடைக்காரன் : ஆமா …
பாபு : அப்ப 1000 ரூபாய்க்கு சில்லறை கொடு! அப்படியே அந்த கடிகாரத்தையும் குடு.
------------------------------------------------------- ---------------------------
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பணம் வைத்தப் பொருளோடு சேர்த்து எடுத்திட்டு போயிடறானே என்ன பண்றது.
எப்பவுமே அவன் எடுக்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும் எடுத்துக்கிட்டும் போக மாட்டான்.
------------------------------------------------------- ---------------------------
ஏங்க.. இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே.. எனக்கு என்னத்தான் கிடைக்கப்போகுது சொல்லுங்க..
இப்படியே சமைச்சின்னா.. கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும்.
------------------------------------------------------- ---------------------------
பாபு : அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம்
கோபி : சரிதான்
பாபு : தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம்
கோபி : ஆமாம்..
பாபு : ஆனால்..
கோபி : ஆனால் என்ன ஆனால்..
பாபு : பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினைக்க முடியுமா?
கோபி : அடப்பாவி?
------------------------------------------------------- ------------------------------
இந்த டி எனக்கு வேண்டாம் சார்..
ஏன் அப்படி சொல்றீங்க?
டில என்ன இருக்கு பாருங்க..
அடடா ஒரு ஈ.. அதுக்கா டீ யே வேணாம்னு சொல்றீங்க..
இந்த டீ ய குடிச்ச ஈ நிலமையே இப்படின்னா.. அப்போ என்னோட நிலைமை?
------------------------------------------------------- -----------------------------
என்னடா நீ ஹோம் ஒர்க் பண்ணியிருக்க? ஒரே கோழி கிறுக்கலா இருக்கு?
இல்ல டீச்சர் எங்க வீட்டில கோழி எல்லாம் ஹோம் ஒர்க் பண்ணாது... எங்க அம்மா தான் பண்ணுவாங்க.
------------------------------------------------------- -----------------------------
நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள் மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
------------------------------------------------------- -----------------------------
என்னங்க என் பையன இப்படி பெயிலாக்கிட்டீங்க
எழுதி வச்சது அவ்ளோதாங்க
என்ன இது பொறுப்பா பதில் சொல்ல மாட்டேங்கீறுங்க.. என் பையன் பெயிலானதுக்கு அவன் தலைல எழுதி வச்சதுதான் காரணம்னு சொல்றீங்களா?
அட நீங்க வேற.. அவன் பரிட்சை பேப்பர்ல எழுதி வச்சது அவ்ளோதான்னு சொன்னேன்.
------------------------------------------------------- -----------------------------
முட்டாள் 1 - கன்னியாக்குமரியில் இருந்து பஞ்சாபுக்கு போன் போட்டு பேசலாம் என்றால் எஸ்டிடி.. ரொம்ப காசு ஆகுமே என்ன பண்ணலாம்?
முட்டாள் 2 - அப்போ நேரா பஞ்சாபுக்கு போய் அங்கே இருந்து ஒரு லோக்கல் கால் செஞ்சி பேசிட வேண்டியதுதானே?
------------------------------------------------------- -----------------------------
ஆசிரியர்: அமெரிக்காவ கண்டுபிடிச்சது யாரு?
சர்தார்: அய்யய்யோ அப்போ அமெரிக்காவ யாராச்சும் தொலைச்சுட்டாங்களா? இல்ல விளையாட்டுக்காக ஒளிச்சு வச்சிட்டாங்களா?
------------------------------------------------------- -----------------------------
நான் எழுதின கதை எப்படி இருக்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது.
------------------------------------------------------- -----------------------------
பரீட்சையில் சைபர் பெற்ற மாணவன் பேப்பரை எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் சென்று
நான் எழுதியிருக்கிற பதில்களுக்கு நீங்க வெறும் சைபர் மட்டும் போட்டிருக்கிறது சரியில்லங் சார்.
ஆசிரியர் சிரித்துக் கொண்டே... நீ சொல்றது சரிதான்.. சைபருக்கு கீழே மார்க் போடுறது அவ்வளோ நல்லா இருக்காதுன்னு நான் நினைச்சேன்.
------------------------------------------------------- -----------------------------
ஏன்யா.. அந்த தீப்பிடிச்ச கட்டிடத்தில் இருந்து 6 பேரைக் காப்பாத்தினதுக்கா அவரை போலிஸ் பிடிச்சிக்கிட்டு போகுது.
நல்லதுக்கே காலமில்லை போ..
நீங்க வேற? அந்த கட்டிடத்தில் இருந்து அவர் காப்பாத்தி வெளிய கொண்டு வந்ததா சொல்றவங்க 6 பேரும் தீயணைப்புப் படை வீரர்களாம்.
------------------------------------------------------- -----------------------------
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
------------------------------------------------------- -----------------------------
ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?
நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
------------------------------------------------------- -----------------------------
ரஜினி மாறி ஆகப்போறேன்னு சவால் விட்டுட்டு போனானே உன் பையன் இப்ப என்ன செய்யறான்?
பஸ்ல கண்டக்டரா இருக்கான்.