karthika
Posted May 29, 2009 by karthika
கடவுளுக்கு ஒரு மின்னஞ்சல் ..! கடிதமெழுதி பதிலில்லை
T.P அடித்தும் பலனில்லை
என்ன நடந்தது
ஊருக்குள்
என்ன ஆனது உறவுக்கு..?

உலகமெங்கும்
நீதி கேட்டும் - அது
கிடைக்கவில்லை அதுதான்
கடவுளே ..!
உனக்கிந்த மின்னஞ்சல்.!

உன் கோவிலும்
அங்கிருக்கிறது
பூசைகளில்லாமல்
கடவுளே !
நீ எங்கே இருக்கிறாய் ?
நீ ஒளிந்து கொள்ள
உனக்கிடமிருந்தால் நாம்
எங்கே போய் ஒளிந்து கொள்வது?

பூக்கும் பூக்களைக் கூட
உனக்கு சாத்த தடையாமே
தமிழனென்ன
தீண்டத்தகாதவனா?
பூக்களும்
பிணமாகத் தானே …
இருக்கின்றன மரத்திலே


நீ
மனிதனைக் கண்டு பிடித்தாய்
மனிதன் விஞ்ஞானத்தை
கண்டு பிடித்தான்
மனிதன்
கண்டு பிடித்த விஞ்ஞானம்
மனிதனையே கொன்று குவிக்கிறது
பார்த்தாயா ?

ஈட்டி அம்பு கொண்டு
மிருக வேட்டை நடத்திய
மனிதன் இன்று
துவக்கும், குண்டுகளும்; கொண்டு
மனித வேட்டை நடாத்துகிறான்
பார்த்தாயா ?

காடுகள் அமைதியாக இருக்க
இப்போ நாடுகளில்த்தான்
மிருக சண்டை தீவிரமாயிருக்கிறது
நீ என்ன வேடிக்கை பார்க்கிறாய்!

ஓவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தமுண்டு அல்லவா?
அர்தமில்லாத பிறப்பை
பிறகேன் சிருஸ்த்தாய் ?

இப்பிரபஞ்சத்தில்!
மொட்டு வந்த
பூக்கள் கூட கருகிக்கிடக்கின்றன
பார்த்தாயா?

உன்னால்த் தான் முடியும்
கருணை வை இறைவா!


Comments
No Comments. Login or Signup to be first.