SANGARSRI
Posted June 24, 2009 by SANGARSRI

அம்மா.......,
உலகத்தின் பொது மொழி..
அனைவரும் அறிந்த மொழி...
விலங்குகள் உட்பட,
உயிரினங்களுக்கும் தெரிந்த மொழி.....!

பிரபஞ்சத்தில் தாய்....,
உயிரினங்களின் ஆரம்பம...
ஆரம்பகட்டத்தின் வளர்ச்சி...
பாசத்தின் திறவுகோல்....
பண்பின் உறைவிடம்....!

கண்முன்னே தெய்வம் இருக்க...,
கல்லையே கும்பிடுவோர்...,
கண் தெரிந்த குருடர்,
காது கேட்கும் செவிடர்......!

உன்னை படைத்த தாயை...
ஒருசொட்டும் கலங்காது,
காத்துப் பார்த்திரு....
தேடிவரும் உன்னை..,
செல்வம் செல்வாக்கெல்லாம்......!

அம்மா என்ற சொல்லுக்கு..,
பொருள் சொல்ல, மொழி இல்லை...
அம்மாவுக்கு விளக்கம்,
அம்மா என்பது மட்டும் தான்....!

உனக்காக பிரார்த்திக்கும்....,
தாயை நீ வணங்கிட்டால்...,
உலகத்தில் கொடுத்து வைத்தவன்..
உன்னை விட யாருமில்லை....!

Comments
No Comments. Login or Signup to be first.